தளபதி விஜய்யின் படம் என்றாலே கண்டிப்பாக வசூலில் பட்டையை கிளப்பும் என்பதை அனைவரும் அறிவோம். அதிலும் தமிழகத்தில் சொல்லவே தேவையில்லை.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ, தமிழகத்தில் மட்டுமே ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது.
இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் தான் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
தமிழக வசூல் விவரம்
இப்படம் முதல் நாளில் இருந்தே தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில், 13 நாட்களில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் GOAT படம் ரூ. 188 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் GOAT படத்தின் வசூல் எந்த அளவிற்கு உச்சத்தை தொடும், ரூ. 200 கோடியை தமிழ்நாட்டில் வசூல் செய்து லியோ படத்தை போலவே சாதனை படைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.