GOAT
தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள GOAT திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 400 கோடி என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார்.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 80 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு Break Even
GOAT படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. அதுவும் ரூ. 70 கோடி என கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தை ரூ. 75 கோடிக்கும் வாங்கியுள்ளாராம்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் GOAT திரைப்படம் Break Even ஆகவேண்டும் என்றால் ரூ. 130 கோடி வரை வசூல் செய்யவேண்டும் என தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை GOAT பதிவு செய்துவிடும் என கூறப்படுகிறது.