நடிகர் கார்த்தி
இயக்குனர் ஆகும் ஆசையில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் கார்த்தி.
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அப்படி நடிக்க தொடங்கிய கார்த்தி திரைப்பயணத்தில் ஆயிரத்தில் ஒருவன், பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற படங்கள் அவரின் நடிப்புக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக மெய்யழகன் திரைப்படம் உருவாகி வருகிறது.
சொத்து மதிப்பு
நடிகர் சிவக்குமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்றாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு ரூ. 97 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.