Sunday, December 8, 2024
Homeசினிமாதமிழ் சினிமா காமெடி நடிகரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள்... ஷாக்கில் பிரபலம்

தமிழ் சினிமா காமெடி நடிகரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள்… ஷாக்கில் பிரபலம்


பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் வரும் நடிகர்களில் ஒருவர் தான் கருணாகரன்.

சுந்தர்.சியின் கலகலப்பு படத்தில் அறிமுகமானவர் சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, லிங்கா, இறைவி, ஒருநாள் கூத்து என 25க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இப்போது நடிகர் கருணாகரனை பற்றி பட தகவலை தாண்டி சொந்த விஷயம் குறித்து ஒரு செய்தி வலம் வருகிறது.

என்ன ஆனது

பிரபலங்களின் வீட்டில் இருக்கும் நகைகள் கொள்ளையடிக்கப்படுவதாக தொடர்ந்து நிறைய செய்திகள் வருகின்றன.

அப்படி காரப்பாக்கத்தில் உள்ள நடிகர் கருணாகரன் வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகை திருட்டு போய் உள்ளது. இந்த விவகாரத்தில் கருணாகரனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் கருணாகரன் வீட்டில் பணிபுரிந்த விஜயா (வயது 44) என்பவர் நகையை திருடியது உறுதியானதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

தமிழ் சினிமா காமெடி நடிகரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள்... ஷாக்கில் பிரபலம் | Jewellery Theft In Actor Karunakaran Home

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments