Sunday, September 8, 2024
Homeசினிமாதமிழ் சினிமா நடிகர் சங்கம் எடுத்த புது முடிவு.. வெளியான புது தகவல் இதோ

தமிழ் சினிமா நடிகர் சங்கம் எடுத்த புது முடிவு.. வெளியான புது தகவல் இதோ


நடிகர் சங்கம்

தொலைக்காட்சி மற்றும் மேடை நடிகர்களுக்கான சங்கம் தான் நடிகர் சங்கம். நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை கேட்டு அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும், மேலும் சினிமாவில் இருக்கும் நடிகை, நடிகர்களுக்கு என்னென்ன தேவை உள்ளதோ அதை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட சங்கம் தான் நடிகர் சங்கம்.


பல உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவரை கொண்ட இந்த சங்கம், குழுவின் தலைவரைத் தீர்மானிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

தற்போது, தமிழ் சினிமா நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருக்கிறார்.

நடிகர் சங்கத்திற்காக 2017ல் கட்டிட கட்டும் பணியை விஷால் மற்றும் சங்க உறுப்பினர்கள் இணைந்து தொடங்கினர்.

ஆனால்,கோவிட் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது, இந்த கட்டிட பணியை தொடங்க நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் சினிமா நடிகர் சங்கம் எடுத்த புது முடிவு.. வெளியான புது தகவல் இதோ | Nadigar Sangam Planning To Conduct Star Night

Star Night

அதற்காக நடிகர்கள் அனைவரையும் வைத்து ஒரு நட்சத்திர இரவு (Star Night) நடத்தி, அதன்மூலம் வரும் நிதியை நடிகர் சங்கத்திற்காக கட்டப்படும் கட்டிடத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமா நடிகர் சங்கம் எடுத்த புது முடிவு.. வெளியான புது தகவல் இதோ | Nadigar Sangam Planning To Conduct Star Night

விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, இதேபோல் பிரமாண்டமான Star Night ஒன்றை நடித்தினார். இதில் ரஜினிகாந்த், கமல், விஜய், சத்யராஜ், சூர்யா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ரோஜா என தமிழ் திரையுலகமே இதில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments