Friday, September 20, 2024
Homeசினிமாதமிழ் பெண்ணை திருமணம் செய்த நடிகர் மோகன்லால்.. அழகான காதல் கதை இதோ

தமிழ் பெண்ணை திருமணம் செய்த நடிகர் மோகன்லால்.. அழகான காதல் கதை இதோ


மோகன்லால்

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் நடித்திருப்பார். இவர் தமிழில் நடித்த காப்பான், ஜில்லா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



மோகன்லால் சுசித்ரா என்ற தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கே.பாலாஜியின் மகள் ஆவார்.

சுசித்ரா நடிகர் ரஜினியின் தீவிரமான ரசிகை.

காதல் கதை

இந்த நிலையில், சுசித்ராவின் அப்பாவான கே.பாலாஜியும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சுசித்ரா அடிக்கடி தன் ஸ்கூலை கட் அடித்து விட்டு ரஜினியை பாக்க சென்று விடுவாராம்.

நடிகர் ரஜினிக்கு அடுத்து சுசித்ராவுக்கு மலையாள நடிகர் மோகன்லாலை தான் மிகவும் பிடிக்குமாம்.

தமிழ் பெண்ணை திருமணம் செய்த நடிகர் மோகன்லால்.. அழகான காதல் கதை இதோ | Actor Mohanlal Wife Suchitra Love Story

ஆரம்பத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்ததால் அவர் மீது வெறுப்பு இருந்த நிலையில், ஒரு நாள் தன் அப்பாவின் நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார் சுசித்ரா அப்போது அங்கு வந்த மோகன்லாலுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் இருவரும் காதலிக்க தொடங்கி விட்டனர்.

தமிழ் பெண்ணை திருமணம் செய்த நடிகர் மோகன்லால்.. அழகான காதல் கதை இதோ | Actor Mohanlal Wife Suchitra Love Story

இந்த தகவலை முதலில் சுசித்ராவின் பெற்றோர் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை தொடர்ந்து, ஒரு பேட்டியில் சுசித்ரா தன்னை விட எந்த நடிகையாலும் சினிமாவில் கூட மோகன்லாளை காதலிக்க முடியாது என்று சுசித்ரா உறுதியாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments