Tuesday, February 11, 2025
Homeசினிமாதமிழ் வேண்டாம், தெலுங்கில் பேசுங்க.. கத்தியவர்களுக்கு அல்லு அர்ஜுன் சொன்ன அதிரடி பதில்

தமிழ் வேண்டாம், தெலுங்கில் பேசுங்க.. கத்தியவர்களுக்கு அல்லு அர்ஜுன் சொன்ன அதிரடி பதில்


நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்.

டிசம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ஐதராபாத் மட்டுமின்றி பாட்னா, சென்னை,கொச்சி உள்ளிட்ட இடங்களிலும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கின்றனர்.

சென்னையில் சமீபத்தில் புஷ்பா 2 ’கிஸ்ஸாக்’ பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீபிரசாத் என பலரும் கலந்து கொண்டனர்.

தெலுங்குல பேசுங்க..

அல்லு அர்ஜுன் மேடையில் பேசும்போது ‘நான் பிறந்த தமிழ் மண்ணுக்கு வணக்கம்’ என சொல்லி தான் பேச தொடங்கினார். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் என குறிப்பிட்ட அவர் தான் 20 வருடமாக இங்கே வாழ்ந்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் இருந்தவர்கள் தெலுங்கில் பேசும்படி தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார்கள்.

அதற்கு பதில் கொடுத்த அல்லு அர்ஜுன் ‘நாம் இருக்கும் மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். வட நாட்டுக்கு சென்றால் ஹிந்தியில் தான் வணக்கம் சொல்வேன். சென்னைக்கு வந்தால் தமிழில் தான் பேசுவேன். கேரளாவுக்கு சென்றால் மலையாளத்தில் வணக்கம் செல்வேன். அது அந்த மண்னுக்கு அளிக்கும் மரியாதை’ என கூறினார்.

தொடர்ந்து தமிழிலேயே தான் அவர் முழுமையாக பேசி முடித்தார். 

தமிழ் வேண்டாம், தெலுங்கில் பேசுங்க.. கத்தியவர்களுக்கு அல்லு அர்ஜுன் சொன்ன அதிரடி பதில் | Pushpa 2 Allu Arjun Reply To Tamil Vs Telugu

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments