வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி நடித்துள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் – 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பா. ரஞ்சித் பேசிய விஷயம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
அப்போது அவர் பேசுகையில், பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த பாராட்டு ஏன் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களுக்கு கிடைப்பதில்லை. இது ஏன் என்பதற்கான கேள்வி எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
தரமான சம்பவம் – பாராட்டிய பா.ரஞ்சித்
கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களில் ஹீரோ திருப்பி அடிப்பதனால் அந்த படங்கள் பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் மிகவும் தவறு, ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் தன் முழு உழைப்பை போட்டு படம் எடுக்கிறார்கள். அந்த நிலையில், இப்படி தான் படம் எடுக்க வேண்டும் என்று கூறுவது தவறு என பேசியுள்ளார்.
மேலும், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர் இயக்கிய படத்தை அனைத்து இயக்குனர்களுக்கும் போட்டுக் காட்டி அவர்களின் கருத்தை கேட்டுள்ளார். எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் என்னோட படங்களை பார்ப்பார். ஆனால், அதை பற்றி என்னிடம் பேச மாட்டார். அவருக்கே படத்தை போட்டு காட்டி, நல்ல விமர்சனத்தை வாங்கியது எல்லாம் தரமான சம்பவம் என பா. ரஞ்சித் பேசிய தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.