Friday, September 20, 2024
Homeசினிமாதலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பேசிய முன்னணி நடிகை நயன்தாரா!

தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பேசிய முன்னணி நடிகை நயன்தாரா!


வினேஷ் போகத்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய நாட்டை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினர்.



இதனால், வினேஷ் போகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என பலர் எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறி அவரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்து விட்டனர்.

தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பேசிய முன்னணி நடிகை நயன்தாரா! | Nayanthara Supports Vinesh Phogat



தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அதே சமயம், வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

நயன்தாரா ஆதரவு


அந்த வகையில், தற்போது நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்தை ஆதரித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்.. வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பேசிய முன்னணி நடிகை நயன்தாரா! | Nayanthara Supports Vinesh Phogat

அந்த பதிவில் நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் மதிப்பை வெற்றிகளால் அளவிடப்பட முடியாது. வெற்றியை தாண்டி நீங்கள் ஒரு பெரிய பரிசைப் பெற்றுள்ளீர்கள், அது எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பு. இனி நீங்கள் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments