இயக்குனர் பார்த்திபன்
கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் திறமை கொண்டவர் இயக்குனரும், தயாரிப்பாளரும்,நடிகருமான பார்த்திபன்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.
பார்த்திபன் பேசியது
இந்த நிலையில், தளபதி 69 படம் குறித்து பார்த்திபன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், “தளபதி கடைசி படத்தை நான் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால், அந்த வாய்ப்பை இயக்குனர் ஹெச். வினோத் தட்டி சென்றுவிட்டார்.
தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் அதற்காக ஹெச். வினோத்தை கொலை செய்துவிட்டு விஜய்யிடம் சென்று ஹெச். வினோத் என்னிடம் தான் உதவியாளராக பணியாற்றினார்.
ஆனால் தற்போது அவர் இல்லை அதனால் நான் உங்கள் படத்தை இயக்குகிறேன் எனக் கூறுவேன்” என்று சிரித்துக்கொண்டே அந்த பேட்டியில் ஜாலியாக பேசியுள்ளார்.