தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது. அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இதுவே தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார்.
இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்களா வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 31ஆம் தேதி அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
அமரன் படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முதலில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இடம் துணை இயக்குனராக துப்பாக்கி படத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரங்கூன். இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கூட இவர் இயக்கியுள்ளார்.
விஜய்யுடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
இந்த நிலையில், துப்பாக்கி படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த ராஜ்குமார் பெரியசாமி, தளபதி விஜய்யுடன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அமரன் படம் வெளிவரவிருக்கும் இந்த சமயத்தில், விஜய்யுடன் ராஜ்குமார் பெரியசாமி எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..