விஜய்
GOAT திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 திரைப்படம் தான் அவருடைய கடைசி படம் என கூறப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69-னுடன் தனது திரை பயணத்தில் இருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளாராம். சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் கவனம் செலுத்து போகிறாராம்.
தளபதி 69 திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவதாக, இது முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகப்போகும் திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
விஜய்யின் சம்பளம்
இப்படத்திற்காக விஜய் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான ஸ்ரீநாத், சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய நடிகர் ஸ்ரீநாத், விஜய் தனது அடுத்த படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என உறுதிப்படுத்தி கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது திரையுலகில் வைரலாகி வருகிறது.