நடிகர் விஜய் கோட் படத்தை தொடர்ந்து தளபதி69 படத்தில் நடிக்க இருக்கிறார். அது தான் அவரது கடைசி படமாக அமைய இருக்கிறது.
ஹெச்.வினோத் அந்த படத்தை இயக்க போகிறார் என்பதும் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தான். மேலும் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
விஜய் சம்பளம்
விஜய் தனது கோட் படத்திற்கு 200 கோடி ருபாய் சம்பளமாக வாங்கினார் என தயாரிப்பாளரே கூறி இருந்தார்.
அடுத்து தளபதி69 படத்திற்கு விஜய் வாங்கப்போகும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. தளபதி69க்கு விஜய் 275 கோடி ருபாய் சம்பளம் வாங்க போகிறாராம்.
அதனால் விஜய் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறி இருக்கிறார்.