Tuesday, January 14, 2025
Homeசினிமாதான் நடித்ததில் அஜித்துக்கு பிடித்த டாப் 5 திரைப்படங்கள் இவை தான்! லிஸ்ட் இதோ

தான் நடித்ததில் அஜித்துக்கு பிடித்த டாப் 5 திரைப்படங்கள் இவை தான்! லிஸ்ட் இதோ


நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.



மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் தான் அங்கு படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக வேலைகள் நடந்து வருகிறதாம். இப்படம் வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு பிடித்த 5 திரைப்படங்கள்


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகை ரம்யா என்பவர், அஜித்துக்கு தன்னுடைய படங்களில் பிடித்த டாப் 5 படங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். இதுவரை அஜித் 61 படங்கள் நடித்துள்ள நிலையில், இதில் அவர் மனம்கவர்ந்த டாப் 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

தான் நடித்ததில் அஜித்துக்கு பிடித்த டாப் 5 திரைப்படங்கள் இவை தான்! லிஸ்ட் இதோ | Ajith Personal Favourite Movies Of Him Top 5 List

முதலில் அவருக்கு பிடித்த படம் வாலி தானாம். இப்படம் தான் அவருக்கு டாப் 5 லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து அமர்க்களம், பில்லா, மங்காத்தா மற்றும் விஸ்வாசம் என இந்த ஐந்து திரைப்படங்கள் தான் அஜித்துக்கு மிகவும் பிடித்தது என சொல்லப்படுகிறது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments