சன் டிவி
சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சி இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார்கள்.
இதில் ஒளிபரப்பாகும் டாப் தொடர்களான சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள் போன்ற தொடர்கள் டிஆர்பில் டாப்பில் இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி சீரியல்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது.
இதனால் டிஆர்பியை ஏற்ற நினைக்கும் சன் டிவி இப்போது ஒரு விஷயத்தை செய்ய உள்ளார்களாம்.
அதிரடி முடிவு
அதுஎன்னவென்றால் சன் டிவியில் டிஆர்பியில் கொஞ்சம் அடிவாங்கி வரும் 5 சீரியல்களை ஒன்றுக்கு பின் ஒன்றாக முடிக்க இருக்கிறார்களாம்.
சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இனியா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வந்தது. அதோடு பல மாதங்களாக சுந்தரி சீரியல் முடிகிறது என்கின்றனர் ஆனால் தெளிவாக எந்த அறிவிப்பும் இல்லை.
பின் மிஸ்டர் மனைவி, மலர், ஆனந்த ராகம் போன்ற இந்த தொடர்களையும் முடிவுக்கு கொண்டு வர சன் டிவி முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் குறித்த விஷயம் உண்மையா என்பதை பொறுத்திருந்து காண்போம்.