Friday, September 13, 2024
Homeசினிமாதிடீரென ராமமூர்த்தி இறப்பு கதைக்களம் வந்தது ஏன், பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறதா?- ஓபனாக கூறிய பிரபலம்

திடீரென ராமமூர்த்தி இறப்பு கதைக்களம் வந்தது ஏன், பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறதா?- ஓபனாக கூறிய பிரபலம்


பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்.

பாக்கியாவை கோபி கொடுமைப்படுத்தி வந்தது முதல் இப்போது பாக்கியா தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி தனது சொந்த காலில் நிற்பது வரை மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

அதன்பின் கோபி எந்த விஷயமாக இருந்தாலும் பாக்கியாவை குத்தம் சொல்லி வந்த கதைக்களம் எல்லாம் சுமாரான வரவேற்பு பெற்று வந்தன.

ஆனால் அடுத்து பாக்கியலட்சுமி சீரியல் கதைக்களத்தில் ராமமூர்த்தி இறந்த கதைக்களம் வரப்போகிறது, அதை நினைத்து ரசிகர்களே சோகம் அடைந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.


ரோசரி பேட்டி


தனது கதாபாத்திரம் முடிவுக்கு வருவது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த திடீர் முடிவு ஏன் என தோன்றியது.

நல்ல பாசிட்டீவ் கதாபாத்திரம், முடிந்தது வருத்தமாக தான் இருக்கு. தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குதுங்கிறதை சொன்னாங்க, கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரம் முடிவடையுதுன்னும் சொல்லியிருந்தாங்க, அதனால் வேற வழி இல்லை.

இதை ஏன் நேரில் வந்து கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, இறுதிச்சடங்கு எல்லாம் ரியலா பண்ணனும்னு சொன்னாங்க, சரி ஓகே பண்ணுங்க சொல்லிட்டேன். ராமமூர்த்திக்கு தான் அவங்க இறுதிச்சடங்கு பண்றாங்கனு எடுத்துக்கிட்டேன், நான் கதையை மதிப்பவன்.

அது நடிப்பு அவ்ளோ தான், ரோசரி நல்லாதான் இருக்கேன் என கூறியுள்ளார். 

திடீரென ராமமூர்த்தி இறப்பு கதைக்களம் வந்தது ஏன், பாக்கியலட்சுமி சீரியல் முடியப்போகிறதா?- ஓபனாக கூறிய பிரபலம் | Baakiyalakshmi Serial Rosary About His Character

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments