நடிகர் தனுஷ்
தனுஷ் கைவசம் தற்போது குபேரா, ராயன் மற்றும் இளையராஜா ஆகிய படங்கள் உள்ளன. இதன்பின் அவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த நம் அனைவரையும் அசரவைத்த திரைப்படம் போர் தொழில். அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
முதல் முறை கூட்டணி
இப்படம் அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். போர் தொழில் படத்தை தொடர்ந்து மீண்டும் இவர் அசோக் செல்வனை வைத்து படம் இயக்கி வருகிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது தனுஷுடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
[C5ABN ]
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விக்னேஷ் ராஜா படத்தில் தனுஷ் நடிப்பாராம். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகப்போகிறது என்று.