Thursday, April 24, 2025
Homeசினிமாதிரிஷாவுடனான போட்டோ.. இணையத்தில் நடிகை ஜோதிகா போட்ட அதிரடி பதிவு

திரிஷாவுடனான போட்டோ.. இணையத்தில் நடிகை ஜோதிகா போட்ட அதிரடி பதிவு


 ஜோதிகா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் தமிழில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நேரடியாக OTT – ல் வெளிவந்திருந்தது. இதை தொடர்ந்து மலையாளத்தில் காதல் தி கோர் படத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய திரைப்படங்கள் இந்தியில் வெளிவந்திருந்த நிலையில், இந்த ஆண்டு Dabba Cartel எனும் வெப் தொடர் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி இணைந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.

இந்த பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிரடி பதிவு

இந்நிலையில், தற்போது த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ‘நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது.” என்றும் நடன இயக்குநர் பிருந்தாவுடன் இருக்கும் போட்டோக்கு கீழ், இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர்.” என குறிப்பிட்டுள்ளார்.    

திரிஷாவுடனான போட்டோ.. இணையத்தில் நடிகை ஜோதிகா போட்ட அதிரடி பதிவு | Actress Jyothika About Trisha

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments