Friday, February 7, 2025
Homeசினிமாதிரிஷாவை திட்டிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. நடிகை கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா

திரிஷாவை திட்டிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. நடிகை கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா


திரிஷா 

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திரிஷா. 20 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா அஜித்தின் விடாமுயற்சி, சிரஞ்சீவியின் விஸ்வபரா, மோகன்லாலின் ராம் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் திரிஷா பற்றி சில தகவலை அவருடன் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.



இதில் “திரிஷாவை எனக்கு சினிமாவில் மனசெல்லாம் படத்திற்கு அறிமுகமாவதற்கு முன்பே தெரியும். இருவரும் 25, 20 ஷோக்களை ஒன்றாக செய்திருக்கிறோம். திரிஷா கிட்ட பிடித்த விஷயம், இன்னைக்கு அவர் வயசு என்னன்னு பாருங்க, அன்னைக்கு எப்படி இருந்தாங்களோ இன்னைக்கும் அப்படிதான் இருக்காங்க.

திரிஷாவை திட்டிய அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. நடிகை கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா | Siruthai Siva Scolded Actress Trisha

தன்னை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த சினிமாத்துறையில் என்பதற்கு உதாரணமே திரிஷா தான். திரிஷாவுக்கு தமிழ் சரியா வராத. தப்புத்தப்பா பேசுவாங்க, எப்பவும் ஃபோனில் தான் இருப்பாங்க. மனசெல்லாம் படத்திற்கு கேமரா மேனாக சிறுத்தை சிவா பணியாற்றினார்.

திரிஷாவை திட்டிய சிறுத்தை சிவா

அப்போது அவர் திரிஷாவிடம் சண்டை போட்டார்.

ஒரு ஹீரோ அழுதுகிட்டு, ராத்திரி தூங்காமல் இருக்கான், நீ என்ன ஃபோனில் மெசேஜ் பண்ணிட்டு இருக்க என்று திட்டியபோது ஓகே கூல் கூல் என்று சாதாரணமாக நடிகை திரிஷா கூறினார்” என நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

[5PIGJ ]

இயக்குனர் சிறுத்தை சிவா ஆஸ்தான இயக்குனர் என்பது அனைவரும் அறிவோம். இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments