ரஜினிகாந்த்
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகப்போகும் இந்த படம் ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம்.
லட்டு பிரச்சனை
அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்துவரும் நடிகர் ரஜினிகாந்திடம் அண்மையில் திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சாரி நோ கமெண்ட்ஸ் என ஒரே வார்த்தையில் கூறி முடித்துவிட்டு வேகமாக கிளம்பியிருக்கிறார்.
இதற்கு முன் விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து கேட்டபோது, சட்டென்று கோபப்பட்ட ரஜினிகாந்த், என்னிடம் அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன் என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.