Wednesday, October 9, 2024
Homeசினிமாதிருப்பதி லட்டு விவகாரம்.. விஜய்யின் லியோ பட பிரபலம் ஒரே வரியில் சொன்ன அதிரடி கருத்து

திருப்பதி லட்டு விவகாரம்.. விஜய்யின் லியோ பட பிரபலம் ஒரே வரியில் சொன்ன அதிரடி கருத்து


திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக சமீபத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் இது நடந்தது என அவர் குற்றம்சாட்டினார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என நாடுமுழுவதும் குரல்கள் எழுந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இது பற்றிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் விசாரணை தொடங்கி இருக்கிறது.


கடவுளை வைத்து அரசியல்

எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி இப்படி ஒரு குற்றச்சாட்டை ஆந்திர முதல்வர் பொதுவெளியில் வைத்தார் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என நீதிபதி காட்டமாக கூறி இருக்கிறார்.

இது பற்றி விஜய்யின் லியோ பட ரைட்டர் மற்றும் பிரபல இயக்குனரான ரத்ன குமார் ட்விட்டரில் கமெண்ட் செய்து இருக்கிறார். “கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments