நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்தின் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உள்ளன.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.
திருமணத்தில் கலந்துகொண்ட அஜித்
ஆனால் அடுத்த வரும் பொங்கலுக்கு வெளிவரவிருந்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் அசர்பைஜான் சென்றுள்ள அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். திருமண ஜோடியுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..