திரையுலக நட்சத்திரங்கள்
விஐபி திருமணங்களில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் விஷயம் உடனடியாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும்.
இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுன் கூறிய விஷயம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. திருமணங்களில் கலந்துகொள்ள சினிமா நட்சத்திரங்கள் காசு வாங்குகிறார்கள் என அவர் கூறியுள்ளது தான் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
உண்மையை உடைத்த சூப்பர்ஸ்டார்
சமீபத்தில் தான் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்காக ரூ. 5000 கோடி செலவு செய்துள்ளார்களாம். ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் வழங்கப்பட்டது.
மேலும், திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் காசு வாங்கி கொண்டு தான் வந்தார்கள் என ஒரு பக்கம் பேசப்பட்டது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த சூழலில் நாகார்ஜூனா பேசிய விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது பழைய பேட்டி ஒன்றில் நடிகர் நாகார்ஜூனா பேசியிருந்தாலும், இதனை தற்போது ரசிகர்கல் வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.