சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
இவர்
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சில நாட்களுக்கு முன்பு சோனாக்ஷி சின்ஹா, ஜாகிர் இக்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கர்ப்பமா?
இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இருந்து சோனாக்ஷி சின்கா தனது கணவருடன் காரில் வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அவர் எதற்காக மருத்துவமனை சென்றார் என தெரியாத நிலையில் , சோனாக்ஷி சின்கா கர்ப்பமாக உள்ளாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொள்வது பாலிவுட்டில் சகஜமாகி வருகிறது.
அதே போல
சோனாக்ஷி கர்ப்பமாக இருப்பாரோ என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது குறித்து சோனாக்ஷி சின்ஹா எந்தவித விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.