கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் சினிமாவில் இருந்த ஒரு விஷயத்தை உடைத்து தனது திறமையை காட்டி முன்னணி நாயகியாக முன்னேறியவர்.
3 கான்களுடன் நடித்தால் தான் பிரபலம் ஆக முடியும் என்பது தவறு என்று செய்து காட்டியவர். இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனை இல்லை, சொந்த வாழ்க்கையிலும் சில சவால்களை சந்தித்துள்ளார்.
இப்போது அரசியலில் களமிறங்கி எம்பியாக கலக்கி வருகிறார். எந்த விஷயம் என்றாலும் போல்டாக பேசக்கூடிய கங்கனா ரனாவத் தற்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
திருமணம்
அதில் அவர், அனைவருக்கும் ஒரு துணை தேவை, துணையின்றி வாழ்வது கடினம், அப்படி வாழ்வது எளிதல்ல.
தேடி தேடி உங்கள் துணையைக் கண்டுபிடித்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கலாம், தானாகவே நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் ஒருவரை காதலித்து வருவதாக கூறியவர் அவர் யார் என்பதை இதுவரை கூறவில்லை.