நானி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றவர்.
இவர் நான்- ஈ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
பிறகு தேவதாஸ், ஜெர்சி, அடடே சுந்தரா, தசரா, ஹாய் நான்னா போன்ற படங்கள் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தற்போது இவர், இயக்குனர் விவேக் ஆத்ரேயாவின் இயக்கத்தில் சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவருடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.
இந்த படத்தை டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் – 29 வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.ஜே. சூர்யாவை பற்றி கூறிய நானி
இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய நடிகர் நானி, தமிழ் மக்கள் தரும் அன்பு என்னை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது எனவும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் முதல் கதாநாயகன் என்றும், மேலும் பிரியங்கா மோகன் ஒரு சிறந்த நடிகை எனவும், அவர் இந்த படத்தில் இயற்கையாக நடித்துள்ளார் எனவே இவர் தான் நேச்சுரல் ஸ்டார் எனவும் பாராட்டி உள்ளார்.
திருமணம் குறித்து பேசிய பிரியங்கா
மேலும் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து கேள்வி எழுந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் கூறிய விஷயமும் வைரலாகி வருகிறது. இதில் எப்போது திருமணம் என பிரியா மோகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இப்போதுள்ள பேச்சுலர் வாழ்க்கை மகிழ்ச்சியாக அனுபவித்துவிட்டு, சரியான நபரை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக அவரை நான் திருமணம் செய்துகொள்வேன் என பிரியங்கா கூறியுள்ளார்.
நானி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து நடிக்கும் இரண்டாம் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.