Monday, March 17, 2025
Homeசினிமாதிருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி


பிரியாமணி

தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவர் தான் பிரியாமணி.

பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் முதல் படம் கைகொடுக்கவில்லை. பின் பாலு மகேந்திரா இயக்கத்தில் அது ஒரு கனா காலம் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

அவருக்கு புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்றால் அது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான்.

பிஸியாக படங்களில் நடித்து வந்தவர் ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போக முஸ்தஃபா என்பவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

எமோஷ்னல்


திருமணத்தால் சில மோசமான விமர்சனங்களை தான் எதிர்க்கொண்டதாக முந்தைய பேட்டி ஒன்றில் பிரியாமணி ஷேர் செய்துள்ளார்.

அதில் அவர், எனது நிச்சயதார்த்த போட்டோ வெளியிட்டதும் என்னை பிடித்தவர்கள் வாழ்த்து கூறினாலும் சிலர் தேவையற்ற வெறுப்பு செய்திகளை பரப்பினார்கள், லவ் ஜிஹாத் என்றார்கள்.

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி | Priyamani Talks About Her Marriage Life

பிரபலம் என்பதால் என்னவேண்டுமானாலும் கூறுவார்கள் என்பதை புரிந்துகொண்டேன், ஆனால் அந்த விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது உண்மை.

திருமணத்திற்கு பிறகு நிறைய செய்திகள் மோசமாக வந்தது, அது அனைத்தும் என்னை 3 நாட்களுக்குள் ரொம்பவே பாதித்தது.

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி | Priyamani Talks About Her Marriage Life

இப்போதும்கூட நான் அவருடன் ஒரு புகைப்படம் போட்டால் வரும் கமெண்ட்ஸ்களில் பாதி எங்களது மதம் அல்லது சாதி பற்றியே தான் இருக்கிறது என பேசியுள்ளார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments