நடிகர் சிம்பு கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது 41 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார்.
அவருக்கு எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கேள்வி கேட்கப்படுகிறது. அவரது அப்பா டிஆர் பிரெஸ் மீட் வந்தாலும் அதே கேள்வி தான்.
சிம்பு கொடுத்த அட்வைஸ்
இந்நிலையில் சிம்பு நடிகர் மெட்ரோ சிரிஷ் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சிம்பு திருமணம் ஆன பெண்ணை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கூறி இருக்கிறார்.
“கல்யாணம் செய்யும் பெண்ணை அவரது அப்பா எப்படி பார்த்துக்கொள்வாரோ அப்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல பெண்ணும் தான் திருமணம் செய்யும் பையனை தனது தகப்பனை பார்ப்பது போல பார்த்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என கூறி இருக்கிறார் சிம்பு.
கல்யாணம் பன்ற பொண்ண அவங்க அப்பா எப்படி பார்த்துபாரோ அப்படி பார்த்துக்கனும் ♥️ @SilambarasanTR_ #SilambarasanTR pic.twitter.com/ApKKpT6oPp
— Rajkumar STR (@Rajkumaar92) July 14, 2024