சோனாக்ஷி சிங்கா
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அதிகம் களமிறங்குகிறார்கள், அவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்புகள் குவிகிறது.
திறமை இருந்தாலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா துறைக்கு வருபவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாக உள்ளது.
இந்த பிரச்சனை பெரிதாக பேசப்படுவதற்கு முன்பே சினிமாவில் களமிறங்கி நாயகியாக கலக்கி வந்தவர் சோனாக்ஷி சிங்கா.
நடிகர், அரசியல்வாதியுமான ஷத்ருகன் சிங்காவின் மகள் என்ற அடையாளதோடு டபாங் படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கினார்.
அதன்பின் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரஜினியின் லிங்கா படத்தின் மூலம் தமிழிலும் நடித்தார்.
ஹனிமூன் போட்டோ
அண்மையில் இவருக்கு சஹீர் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்தது.
கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். காதலனை திருமணம் செய்துகொண்ட சோனாக்ஷி தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார்.
அங்கு நீச்சல் குளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.