நடிகர் சித்தார்த்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சித்தார்த். தமிழில் பல படங்களில் நடித்த இவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்தார்.
இவரும் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம்
இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் அவர்களுக்கு நிச்சயம் ஆனதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சில தினங்களுக்கு முன் இந்த ஜோடி அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டனர்.
சித்தார்த்தின் பதில்
இந்த நிலையில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இணைந்து பேட்டி ஒன்று அளித்துள்ளனர். அப்போது அங்கு அதிதி திருமண நாளன்று காலையில் முதலில் செய்த காரியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சித்தார்த், “நான் நன்றாக உறங்கி கொண்டு இருந்தேன் அப்போது என் அனுமதி இல்லாமல் என்னுடைய விருப்பத்திற்கு எதிராக என்னை எழுப்பினர் எனது நாள் தொடங்கி விட்டது என்ற தயக்கத்துடனும், அழுகையுடனும் நான் எழுந்தேன்” என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.