Sunday, November 10, 2024
Homeசினிமாதிருமண வதந்திகள்!! நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி..

திருமண வதந்திகள்!! நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி..


கீர்த்தி சுரேஷ்

மலையாள படஙக்ளில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயன் என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.



இப்படத்தை அடுத்து ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா, தொடரி, சண்டக்கோழி 2, சர்கார், பைரவா, சாணிக் காயிதம், மாமன்னன், சைரன் எனப் பல படங்களில் நடித்துள்ளர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

பதிலடி

 நடிகை கீர்த்தி சசுரேஷ் அவரது நண்பரை திருமணம் செய்ய போகிறார் போன்ற வதந்திகள் வந்துகொண்டு இருந்தது.



இந்நிலையில் இவர் தன் மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை தலையிட்டு, என் குடும்பத்தார் குறித்து நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி பேசுவதை நான் இரண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன்.

நடிகர் விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம், ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.    

திருமண வதந்திகள்!! நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதிலடி.. | Keerthy Suresh Reply To Rumours

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments