சீரியல்கள்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் உயிர் மூச்சாக உள்ளது. காலையில் வீட்டில் இருப்பவர்களை வெளியே அனுப்பினால் பிறகு அவர்களின் ராஜ்ஜியம் தான்.
எனவே சீரியல்களுக்கு பெண்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள், இப்போது ஆண்களும் வீட்டில் இருந்தால் தொடர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
இதனால் சன், விஜய், ஜீ என சீரியல்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
புதிய முயற்சி
இப்போது அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு தொடர் திரைப்படம் போல் இரண்டரை மணி நேரம் ஒளிபரப்பாகப்போகும் ஒரு சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. ஜீ தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் தொடர் நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இந்த தொடரில் ஜெய் ஆகாஷ் மற்றம் ரேஷ்மா முரளிதரன் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த தொடரை வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி இரண்டரை மணிநேரம் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார்களாம்.
சினிமாவில் வருவதைப்போல இந்த இரண்டரை மணி நேரத்தில் காதல், பாசம், வில்லன், மிரட்டல், பிரிவு என அனைத்து விதமான உணர்வுகளையும் தொடரில் வெளிப்படுத்தவுள்ளார்களாம்.