Sunday, September 8, 2024
Homeசினிமாதீனா படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா, அஜித் இல்லை- இவர்தான்

தீனா படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா, அஜித் இல்லை- இவர்தான்


தீனா படம்

நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் அவரது வாழ்க்கையையே மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்தது தீனா திரைப்படம்.

கடந்த 2001ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இப்படம் வெளியானது, 23 வருடங்களை எட்டிவிட்டது. தல என்ற பெயரே அஜித்திற்கு இந்த படம் மூலம் தான் வந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தில் அஜித்தை தாண்டி லைலா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆக எப்போதும் போல அஜித்தின் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

முதல் சாய்ஸ்


தீனா படத்தின கதையை முருகதாஸ் முதலில் அஜித்திற்கு பதிலாக வேறொரு நடிகரிடம் தான் கூறியிருக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் பிரசாந்த் தான்.

அண்மையில் நடிகர் பிரசாந்தின் தந்தைய தியாகராஜன் ஒரு பேட்டியில், ஏ.ஆர்.முருகதாஸ் தீனா கதையை முதலில் சொன்னார், அந்த நேரத்தில் பிரசாந்த் ஓய்வு இல்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லி கேட்டேன்.

ஆனால் அவர் உடனே படம் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார், அதனால் படம் மிஸ் ஆனது என கூறியுள்ளார். 

தீனா படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா, அஜித் இல்லை- இவர்தான் | Ajith Is Not First Choice For Dheena Movie

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments