கங்குவா
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் படம் வெளிவருகிறது என அறிவித்தபின், வேட்டையன் படத்துடன் கங்குவா படம் மோதாது என தெரிவித்து, கங்குவா ரிலீஸ் தள்ளிப்போகிறது என அறிவித்தனர்.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.
ரிலீஸ் தள்ளிப்போகிறது என கூறியிருந்தாலும், ரிலீஸ் தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. தீபாவளிக்கு கங்குவா வெளியாகும் என பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதற்கும் சாத்தியம் இல்லை என்கின்றனர்.
ஏனென்றால் தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவனின் Bloody Beggar மற்றும் இரண்டு ஹிந்தி படங்களும் வெளியாகிறதாம். இதனால் அதிக திரையரங்குகள் கிடைக்காத காரணத்தினால் கங்குவா படம் தீபாவளி பண்டிகைக்கும் வெளிவராது என கூறுகின்றனர்.
புதிய ரிலீஸ் தேதி
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், நவம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் கங்குவா படத்தில் சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.