துப்பாக்கிய பிடிங்க சிவா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தளபதி விஜய்யின் GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கேமியோ ரோலில் வந்த சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கிய பிடிங்க சிவா என விஜய் கூறுவார்.
இந்த வசனத்தை விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால், தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு அரசியலுக்கு விஜய் செல்கிறார் என ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்ட நிலையி, இந்த விஷயம் தற்போது படுவைரலாக பேசப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கு இதுகுறித்து கேள்வி எழுந்து வருகிறது.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் கூட, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து இதுகுறித்து கத்தினார்கள். இந்த நிலையில் தற்போது அமரன் பட ப்ரோமோஷன் விழாவில் இதைப்பற்றிய கேள்வி சிவகார்த்திகேயனிடம் கெடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வருகிற தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படம் அமரன்.
அமரன்
இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். இந்திய ராணுவத்தில் சேவை செய்து, இந்திய நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்தது.
பேட்டி
ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில், ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் முதல்கட்டமாக கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி சாய் பல்லவி மற்றும் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோர் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த பேட்டியில் கதாநாயகன் சிவகார்த்திகேயனுடன் ’துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கு’ என தொகுப்பாளினி கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் “துப்பாக்கி எப்பவுமே கனமாக தான் இருக்கும். நாம தான் அதை சரியாக Handle பண்ணனும்” என கூறினார்.