லக்கி பாஸ்கர்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர்.
சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான படம் தான் இது.
தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாக கொண்டு இப்படம் உருவானாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த தனுஷும் லக்கி பாஸ்கர் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக இப்படமும் வெளியாகி இருந்தது. பல படங்களுக்கு இடையில் வெளியானாலும் லக்கி பாஸ்கர் மொத்தமாக இதுவரை ரூ. 65 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.
கதைக்களம் தெளிவாக அமைய ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பும் கொடுத்து வருகிறார்கள்.