Monday, April 21, 2025
Homeஇலங்கைதென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் – Oruvan.com

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம் – Oruvan.com


தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் பதவி நீக்க தீர்மானத்தை ஒருமனதாக உறுதிசெய்துள்ளனர்.

அதற்கமைய, தென்கொரியத் ஜனாதிபதி உடன் அமுலாகும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 60 நாட்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும். விசாரணையின் போது, ​​அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி இரு தரப்பினரின் வாதங்களையும் வாசித்தார். யூன் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

தேர்தல் நடைபெறும் காலம் வரையில் தற்போதைய பிரதமர், பதில் ஜனாதிபதியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டும் தென் கொரியாவில் இதே முறையில் ஒரு ஜனாதிபதி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments