Monday, April 21, 2025
Homeஇலங்கைதேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது

தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனமடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது


தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறும் அவர்,ஜே.வி.பி.யே தற்போது நாட்டை ஆட்சி செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அவர் தனது இணைய சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

”இந்த அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தேசிய மக்கள் சக்திகளின் தொலைநோக்குப் பார்வை தொடர்பான விவாதத்தில் திலீப விதாரண மிக முக்கிய பங்கு வகித்தவர்.

”மறுமலர்ச்சி என்ற கருத்தை கருத்தியல் ரீதியாக உருவாக்குவதில் திலீப் மிக முக்கிய பங்கு வகித்தவர். அவர் அரசாங்கத்தின் மீது மிகுந்த விசுவாசத்தையும் கொண்டிருந்தார்.

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பதவியை அவர் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் வகித்து வந்த தீலிபின் இராஜினாமாவை, ஒரு சிறிய சம்பவமாகக் கருத முடியாது.

அது மட்டுமல்லாமல், பொதுவாக தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் மக்கள், குறிப்பாக ஜேவிபியைச் சேர்ந்தவர்கள், திலீப் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

எனவே, இந்த பின்னணியில் அவரது இராஜினாமா ஒரு சிறிய அபாயகரமான விடயமாக கருதப்படலாம்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக நடத்துவது உயர்மட்டத் தலைமையே.தேசிய மக்கள் சக்தி என்று ஒரு நிர்வாக சபை இருக்கிறது. ஆனால், அது ஏதோ ஒரு வகையில் செயலிழந்து விட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசு செயல்படும் விதத்தால் அவர்களது அடித்தளம் வெகுவாக பலவீனமடைந்துள்ளது. இந்தத் தீங்கான நிலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பைப் பாதிக்கும் விடயம் என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments