Friday, January 17, 2025
Homeசினிமாதேடி வந்து சிவகார்த்திகேயன் செய்த உதவி.. ராசு மதுரவன் மனைவி நெகிழ்ச்சி

தேடி வந்து சிவகார்த்திகேயன் செய்த உதவி.. ராசு மதுரவன் மனைவி நெகிழ்ச்சி


அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கியவர் ராசு மதுரவன். அவர் கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார்.

ராசு மதுரவன் கடந்த 2013ல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் மனைவி பவானி வறுமையில் தத்தளிப்பதாக சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.

சிவகார்த்திகேயன் உதவி

ராசு மதுரவன் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்காத சிவகார்த்திகேயன் அவரது மனைவி பேட்டியை பார்த்துவிட்டு உடனே உதவி செய்து இருக்கிறார்.

ராசு மதுரவன் மகள்கள் இருவரது ஸ்கூல் பீஸ் 97 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தி இருக்கிறார்.

இதற்காக அவரது மனைவி நெகிழ்ச்சியாக நன்றி கூறி இருக்கிறார். அவர் இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்டுகொள்ளாத நிலையில் சிவகார்த்திகேயன் செய்த உதவி மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
 

தேடி வந்து சிவகார்த்திகேயன் செய்த உதவி.. ராசு மதுரவன் மனைவி நெகிழ்ச்சி | Sivakarthikeyan Helps Rasu Madhuravan Family

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments