தெலுங்கு சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கே செம போட்டியாக வளர்ந்து வரும் நிலையில் ஜுனியர் என் டி ஆர் நடிப்பில் மற்றொரு பேன் இந்தியா படமாக வெளிவந்துள்ள தேவரா எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே இந்தியாவில் உலககோப்பை நடக்க, ஒரு முன்னெச்சரிக்கை ஆக பெரிய கேங்ஸ்டர்களை அடக்க ஒரு போலிஸ் குரூப் தயாராக, எத்தி என்ற கேங்ஸ்டரை தேடி செங்கடல் செல்ல, அங்கு பிரகாஷ்ராஜ் தேவரா கதையை அந்த போலிஸ் குரூப்பிடம் சொல்ல ஆரம்பிக்கிறார்.
தேவரா 4 ஊர் மக்களுக்கு தலைவன் போல் இருந்தாலும், கடலில் முறைகேடாக வரும் ஆயுதங்களை அரசியவாதி ஒருவருக்கு எடுத்து தருகிறார்.
அவருடன் சையிப் அலிகான், கலையரசன் போன்றோர் இருக்க, ஒரு கட்டத்தில் தான் செய்யும் வேலை மிக மோசமானது, இதனால் நம் மக்கள் கஷ்டப்படுகின்றனர் என்று வேலையை நிறுத்த சொல்கிறார்.
ஆனால், பணத்தாசையால் சையிப் அலிகான் தேவராவை கொல்ல முயற்சிக்க, தேவாரா தன்னை கொல்ல வந்தவர்களை எல்லாரையும் கொன்று மாயமாகிறார், தேவரா எங்கே, எங்கே போனார் இந்த நாஷ வேலைகளை தொடர்ந்த தடுத்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஜுனியர் என் டி ஆர் RRR படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள தேவரா அவருக்கு கொடுத்த அப்பா-மகன் ரோலில் மாஸ் காட்டியுள்ளார். அதிலும் அப்பாவாக வரும் தேவாரா குற்ற உணர்வுடன் ஆரம்பத்தில் வேலை செய்தாலும், அவர் மாறும் இடம் அதிலிருந்து அந்த ஊருக்காக அவர் செய்யும் வேலைகள் என மகனை மிஞ்சி ரசிகர்கள் மனதில் நிற்கின்றார்.
வீரனின் மகன் கோழையாக மகன் NTR-ம் ரசிக்க வைக்கிறார். கடல் சார்ந்த கதை என்பதால் ஆரம்பத்திலேயே கப்பலில் கொள்ளை அடிக்கும் காட்சி ஆக்ஷன் விருந்து தான். அதோடு ஆயுதங்களை தங்கள் ஊருக்கு எடுத்து செல்ல வைக்கப்படும் சண்டைக்காட்சி இரத்த ஓட்டம் தான். ஆக்ஷன் ரசிகர்களுக்கு நிறைய விருந்து படையல் வைத்துள்ளனர்.
ஆனால், படத்தில் லாஜிக் என்று பார்த்தால் நெத்திலி மீன் அளவுக்கு கூட இருக்காது, ஏனெனில் சுறா மீனிலையே கயிற்றை கட்டி குதிரை சவாரி செய்கிறார் யங் டைகர் NTR. ஜான்வி எல்லாம் ஏதோ காட்சி பொருள் போல் காட்டி இன்னும் எத்தனை வருடத்துக்கு ஹீரோயின்களை இப்படியே காட்டுவார்களோ என்று சொல்ல தோன்றுகின்றது.
ரத்னவேலு ஒளிப்பதிவு ட்ரைலரில் செட் என்பது தெரிந்தாலும் படத்தின் ஓட்டத்தில் ஒன்றி போகிறது, படத்தின் மறைமுக ஹீரோ அனிருத் தான், BGM தெறிக்க விட்டுள்ளார்.
அதோடு தெலுங்கு சினிமா கொஞ்சம் பாகுபலியை மறக்க வேண்டும், அதையே வேறு வேறு களத்தில் புதிய ஹீரோவுடன் பார்ப்பது போலவே உள்ளது பல காட்சிகள்.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி
ஆக்ஷன் காட்சிகள்
NTR நடிப்பு, அனிருத் இசை
பல்ப்ஸ்
லாஜிக் இல்லாத காட்சிகள்.
பாகுபலி போல் வைத்தே ஆகவேண்டும் என்ற கிளைமேக்ஸ் டுவிஸ்ட்