Tuesday, October 15, 2024
Homeசினிமாதொகுப்பாளினி அர்ச்சனா கேட்ட கேள்வி, கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி... எமோஷ்னல் ஆன சரிகமப மேடை

தொகுப்பாளினி அர்ச்சனா கேட்ட கேள்வி, கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி… எமோஷ்னல் ஆன சரிகமப மேடை


சரிகமப ஷோ

ஜீ தமிழில் மிகவும் ஹிட்டாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சரிகமப நிகழ்ச்சி.

பாடல் நிகழ்ச்சி, கிடைக்கும் மேடையில் தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என பல கலைஞர்கள் போட்டி போட்டு பாட்டு பாடி வருகிறார்கள். சரிகமப 4வது சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த எபிசோடில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றிருக்கிறது.


அழுத சைந்தவி

பாடகி சைந்தரி இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 2020ம் ஆண்ட மகள் பிறந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மே மாதம் பிரிந்துவிட்டதாக அவர்களே அறிவித்தார்கள்.

இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் சைந்தவி கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

கடந்த எபிசோடில் டெடிகேஷன் ரவுண்டு நடந்துள்ளது, அதில் போட்டியாளர் ஸ்வேதா தன்னுடைய தந்தைக்கு ஆனந்த யாழை பாடலை டெடிகேட் செய்துள்ளார்.

அப்போது அர்ச்சனா, சைந்தவியிடம் உங்களது அப்பா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்டுள்ளார்.

அதற்கு அழுதுகொண்டே பேசிய சைந்தவி, நான் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பா தான்.

நான் செய்யும் விஷயங்களில் சரி எது, தவறு எது என என்னை வழிநடத்துவது அவர்தான். உடனே நிகழ்ச்சியில் தனது அப்பாவை பார்த்ததும் சைந்தவி அவரை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார். 

தொகுப்பாளினி அர்ச்சனா கேட்ட கேள்வி, கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி... எமோஷ்னல் ஆன சரிகமப மேடை | Singer Saindhavi Cries In Saregamapa Show

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments