Monday, March 24, 2025
Homeசினிமாதொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்


நடிகை தமன்னா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.


20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் புகழ் பெற்று வருகிறார்.

தமன்னா ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்த்ரி 2’ படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.

இவர் நடனமாடும் படங்கள் தொடர்ந்து வசூலில் வெற்றி பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் தமன்னாவை அவர்கள் படத்திற்காக ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

வருத்தம் 

இதனால் சற்று வருத்தமடைந்த தமன்னா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம் | Actress Tamannaah Was Upset

ரஜினி படம் என்பதால் தான் ஜெயிலர் படத்தில் ஆடினேன். ‘ஸ்த்ரி 2’ படத்தின் இயக்குனர் எனது நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன். அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments