Sunday, December 8, 2024
Homeசினிமாதொடர்ந்து நிறைய சீசன்கள் வரும் பிக்பாஸ் வாய்ப்பு, போகாதது ஏன்?... ஓபனாக கூறிய நடிகர் விமல்

தொடர்ந்து நிறைய சீசன்கள் வரும் பிக்பாஸ் வாய்ப்பு, போகாதது ஏன்?… ஓபனாக கூறிய நடிகர் விமல்


பிக்பாஸ்

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வந்து இப்போது தென்னிந்தியாவை ஆட்டிவைக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.

தமிழில் ஆரம்பமான முதல் சீசன் முதல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். 7வது சீசன் வரை தொகுத்து வழங்கிவந்த கமல்ஹாசன் இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை.

தற்போது அவரது இடத்தில் இனி விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக கலக்க இருக்கிறார். நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, அடுத்த மாதமும் ஷோ தொடங்கப்படும் என்கின்றனர்.


நடிகர் விமல்


இந்த நிலையில் நடிகர் விமல் ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிக்பாஸில் தொடர்ந்து 3 வருடமா கூப்பிட்டு இருக்காங்க, நான்தான் போகல.

அங்கே போனால் என்னோட குணத்துக்கு செட் ஆகி, நல்லாவும் இருந்திருக்கலாம். இல்லையென்றால் சண்டை போட்டு 3 நாளில் திரும்பியும் வந்திருக்கலாம்.

இத்தனை வருட அனுபவத்தில் போகும் இடம் வெகுதூரமில்லை, சார் மாதிரி நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையும்போது நடிப்பில் பிடிப்பு அதிகமாகிறது என பேசியுள்ளார். 

தொடர்ந்து நிறைய சீசன்கள் வரும் பிக்பாஸ் வாய்ப்பு, போகாதது ஏன்?... ஓபனாக கூறிய நடிகர் விமல் | Vimal About Bigg Boss Show Chance

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments