ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்து இருந்த படம் லால் சலாம்.
இந்த வருடம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்த இந்த படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என ஐஸ்வர்யா கூறி இருந்தார்.
மீண்டும் ஷூட்டிங் நடத்த முடியவில்லை என்பதால் இருக்கும் காட்சிகளை வைத்து படத்தை எடிட் செய்ததாகவும் அவர் கூறி இருந்தார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக இணையத்தில் அதிகம் ட்ரோல்களையும் ஐஸ்வர்யா சந்தித்தார்.
கிடைத்துவிட்டது
இந்நிலையில் தொலைந்த காட்சிகளில் சிலவற்றை மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது என கூறி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,
லால் சலாம் extended director’s cut ஒடிடியில் ரிலீஸ் ஆகும்போது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என கூறி உள்ளார்.