Tuesday, October 15, 2024
Homeசினிமாதோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- சென்ராயன் எமோஷ்னல் டாக்

தோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- சென்ராயன் எமோஷ்னல் டாக்


சென்ராயன்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பலர் பிரபலமாகியுள்ளனர்.

அப்படி அந்த நிகழ்ச்சியில் தான் பல வருடம் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்துவிட்டது என்ற செய்தி கேட்டு படு எமோஷ்னல் ஆனவர் தான் சென்ராயன்.

இவர் பிக்பாஸ் வருவதற்கு முன் 2007ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

பின் சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம், கொளஞ்சி, பா.பாண்டி, ஸ்பைடர், வட சென்னை, அசுரன், மார்க் ஆண்டனி என தொடர்ந்து படங்கள் நடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


பிரபலத்தின் பேட்டி

அண்மையில் ஒரு பேட்டியில் சென்ராயன் பேசும்போது, என் தோற்றத்தை வைத்து நிறைய இடத்தில் நான் அவமானங்கள் சந்தித்து இருக்கிறேன். ஒரு நாள் இரவு நேரத்தில் சாலையில் நடந்துசென்ற போது என்னை திருடன் என நினைத்து போலீஸ் புடிச்சிட்டாங்க.

பின்னர் நான் பொல்லாதவன் படத்தில் நடித்தது தெரிந்து என்னை அனுப்பி விட்டார்கள் என எமோஷ்னலாக கூறியுள்ளார்.

பின் தனது மனைவி கயல்விழி பற்றி பேசும்போது, திருமணம் ஆகி 4 வருடம் குழந்தை இல்லாத சென்ராயன் பிக்பாஸ் வீட்டில் கேட்டு அப்படியொரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நடிகை சினேகாவை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று சர்ப்ரைஸாக சினேகாவின் வீட்டிற்கு தனது மனைவியை அழைத்து சென்றிருக்கிறார் சென்ராயன். 

தோற்றத்தால் சந்தித்த அவமானம், மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்- சென்ராயன் எமோஷ்னல் டாக் | Sendrayan Emotional Interview About His Past

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments