நடிகர் விஷால்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால்.
அப்படத்திற்கு பிறகு விஷால் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது தான் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.
பிறந்தநாள்
தனது சினிமா பயணத்தில் பரபரப்பாக இருக்கும் விஷால் இன்று 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு படத்துக்கு ரூ. 11 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
மொத்தமாக விஷாலின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.