கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பதித்தவர்.
இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ரஜினி முருகன், மாமன்னன், சாமி- 2, பைரவா,அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை சம்பாதித்தார்.
தற்போது, இவர் நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் ரகு தாத்தா படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
வெளிப்படையாக பேசிய கீர்த்தி
அதில், “தனக்கு நடிகர் அஜித்துடன் ஜோடியாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகவும், அவருக்கு தங்கையாக நடிக்க மாட்டேன்” என்றும் கூறியுள்ளார்.
மேலும் அஜித்தை சந்தித்த அனுபவம் குறித்து பேசிய கீர்த்தி, “நான் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கின் போது தங்கியிருந்த ஹோட்டலில் தான் நடிகர் அஜித் இருந்தார் , அங்கு நான் அவரை சந்தித்து பேசினேன்” என்றும் கூறியுள்ளார்.