அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முடிய கையோடு குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார் அஜித்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஷாமிலி எனும் ஒரு தங்கை இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவர் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக வீர சிவாஜி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. நடிப்பை தவிர்த்துவிட்டு ஓவியத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் ஷாமிலி.
அஜித்துடன் நடித்துள்ள ஷாமிலி
இந்த நிலையில் ஷாலினியின் தங்கையான ஷாமிலி தனது மாமா அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆம், அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் தபுவின் தங்கை கதாபாத்திரத்தில் ஷாமிலி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.