சர்தார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி.
இவரது நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் சர்தார். இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இதில் கார்த்தி ஒரு உளவாளியாக நடித்திருப்பார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது
அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
2ம் பாகம்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. சர்தார் படத்தின் 2ம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளி வந்துள்ளது, அதில், நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.