நடிகர் சங்க பொதுக்குழு
சென்னையில் இன்று நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் விஷால் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட சைக்கிளில் சென்ற வீடியோ கூட வைரலானது.
நடிகர் சங்க கட்டட பணிகளை மீண்டும் தொடர அமைச்சர் உதயநிதி, தன் சொந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடி ரூபாயும், மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரை செய்து ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ. 1 கோடி கொடுத்த விஜய்
மேலும் நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிக்கவிருந்தாக வாக்கு கொடுத்துள்ளார்களாம். மேலும் நடிகர் விஜய் கடனாக இல்லாமல், நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ. 1 கோடி நிதியாக வழங்கியுள்ளாராம்.
சமீபத்தில் வெளிவந்த ஹேமா கமிட்டி பெரும் பாதிப்பை கேரள திரையுலகில் ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சங்க மகளிருக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.